செய்திகள் :

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

post image

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (26.4.2025) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி.மாரியம்மாள் (வயது 51) க/பெ.மாரிமுத்து, எஸ் கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி.திருவாய்மொழி (வயது 48) க/பெ.ராமர் மற்றும் எம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த திருமதி.கலைச்செல்வி (வயது 35) க/பெ.விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாக்கியலட்சுமி (வயது 55) க/பெ.துரைராஜ், கோமதி (வயது 55), பாத்திமுத்து (வயது 55) க/பெ.அப்துல் காதர், திருமதி.ராபியா பீவி (வயது 50) க/பெ.தீன்முகம்மது, திருமதி.ராமசுப்பு (வயது 43) க/பெ.அன்புசெல்வன், லட்சுமி (வயது 40) க/பெ.தங்கப்பாண்டியன், முனியம்மாள் (வயது 40), க/பெ.ஆறுமுகம் ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர்: வாகனம் மோதி சிறுவன் பலி

இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எ... மேலும் பார்க்க

சென்னையில் ஓடுதளத்திலேயே விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மும்பை புறப்பட்டது. அப்போது ஓடு... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் சேலம் உள்பட 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழ... மேலும் பார்க்க

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது: விஜய் பேச்சு

மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தவெக பூத் கமிட்டி மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில், தவெக தொண்டர்கள் போர் வீரர்களைப் போல செயல்பட வேண்டும். மக்களி... மேலும் பார்க்க

தவெக பூத் கமிட்டி மாநாடு நடக்கும் இடம் அருகே லேசான தீ விபத்து!

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே மின்கசிவு காரணமாக லேசான தீ விபத்து ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு! வெய்யில் எப்படி இருக்கும்?

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல... மேலும் பார்க்க