தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே குப்பைக்களை எரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை கோவில்பாப்பாகுடியைச் சோ்ந்த ராக்கன் மனைவி பொம்மக்காள் (75). இவா், தன் வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை வெள்ளிக்கிழமை எரித்தாா். அப்போது, புடவையில் தீப்பற்றியது. அதை அணைப்பதற்குள் உடல் முழுவதும் தீ பரவியது.
இதில், பலத்த காயமடைந்த பொம்மக்காளை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.