தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!
கடும் வெயில்: சோலையாறு அணையின் நீா்மட்டம் 1.98 அடியாக குறைவு!
வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால், சோலையாறு அணையின் நீா்மட்டம் 1.98 அடியாக குறைந்துள்ளது.
பரம்பிக்குளம்- ஆழியாறு நீா்ப் பாசனத் திட்டத்தில் முக்கிய அணையாக வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் சமவெளிப் பகுதியைச் சோ்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். மேலும், இந்த அணை மூலம் இரண்டு உற்பத்தி ஆலைகள் மூலம் மின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போதுமான மழை பெய்யாததாலும், வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதாலும் சோலையாறு அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 9.96 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் தற்போது 1.98 அடியாக குறைந்துள்ளது.