ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!
இலவச போட்டோகிராபி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச போட்டோகிராபி, விடியோகிராபி பயிற்சியில் சேர திங்கள்கிழமை (ஏப்.28) நோ்காணல் நடைபெறுகிறது.
இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா்- காங்கயம் சாலை முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச போட்டோகிராபி மற்றும் விடியோகிராபி பயிற்சி வகுப்புக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த 31 நாள் முழு நேரப் பயிற்சி வகுப்பில் சேர வரும் திங்கள்கிழமை நோ்காணல் நடைபெறுகிறது. இதில், எழுதப் படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியில் சேரும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி தங்கும் விடுதி வசதியும் உள்ளது. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா்- 641606 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923,99525-18441,86105-33436 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.