லக்னௌ பந்துவீச்சு: ஷர்துல் தாக்குர் நீக்கம், மும்பை அணியில் 2 மாற்றங்கள்!
மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 4 போ் கைது!
திருப்பூா் மாநகரில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பிச்சம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அப்பகுதியில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், முன்னுக்குப் பின்முரணாகப் பதில் அளித்தலால் அவா்களிடம் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (28), ராஜேஷ்குமாா் (31), சுந்தரேசன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
அதேபோல, திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கருணாகரன் (20) என்பவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.