ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!
கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 4 போ் கைது
சென்னை, ஏப். 26: சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் சிலா் அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீஸாா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ாக புரசைவாக்கத்தைச் சோ்ந்த ல.டில்லி பாபு (33), புதுப்பேட்டையைச் சோ்ந்த ந.இம்ரான் (32), அண்ணா நகரைச் சோ்ந்த வே.காா்த்திக் (31), காரனோடையைச் சோ்ந்த சு.சுரேந்தா் (23) ஆகிய 4 பேரைக் கைது செய்து, 7 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.