செய்திகள் :

Vijay Devarakonda: `பழங்குடிகளை அவமதிக்கும் கருத்து' - விஜய் தேவரகொண்டா மீது வழக்கறிஞர் புகார்

post image

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தின் புரோமோஷன் விழா ஏப்ரல் 26 அன்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

Vijay Devarakonda
Vijay Devarakonda

அதில், பஹல்காம் தாக்குதல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், `` பழங்குடியினர் 500 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது போல, மனதையும் பொது அறிவையும் பயன்படுத்தாமல் தீவிரவாதிகளும் தாக்குதல்களை நடத்துகிறார்கள்." என்றார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான் என்பவர் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதில், ``ஒரு பெரிய பார்வையாளர்கள் கூட்டம் இருக்கும் சபையில் உரையாற்றிய விஜய் தேவரகொண்டா, இன்றைய சமூக-அரசியல் அமைதியின்மைக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடி மோதல்களுக்கும் இடையே பொருத்தமற்ற ஒப்பீட்டை தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பழங்குடிகளை அவமதித்திருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vijay Devarakonda
Vijay Devarakonda

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சட்டப்பூர்வ கருத்துக்காக நாங்கள் அதை பரிந்துரைத்துள்ளோம், மேலும் பெறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

HIT 3 Review: ஒரு கன்டெய்னர் துப்பாக்கி; 2 லாரி கத்தி; பல லிட்டர் ரத்தம்; ஹிட்டடிக்கிறதா இந்த ஹிட்?

அர்ஜுன் சர்கார் (நானி), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ட்ரிட்டான போலீஸ் அதிகாரி. இவர் HIT என்கிற Homicide Intervention Team என்கிற குற்றவாளிகளைத் தண்டிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையிலும் இருக்கிறார். ... மேலும் பார்க்க

Allu Arjun: `வயது ஏறிக்கொண்டே போகிறது, அதனால்..!' - WAVE மாநாட்டில் நடிகர் அல்லு அர்ஜூன்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரும் எதிர்ப்பார்... மேலும் பார்க்க

Sree leela: "இதயத்தைக் கொள்ளை கொள்ளும் தருணம்" - மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்த நடிகை ஶ்ரீ லீலா

நடிகை ஶ்ரீ லீலா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளுக்கும் பேன் இந்தியன் நட்சத்திரமாகப் பயணித்து வருகிறார்.தற்போது அவர் மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்.அந்தக் குழந்தையின் புகைப்படத்தைத் ... மேலும் பார்க்க

HIT 3: "எப்போதும் தமிழ், மலையாள ரசிகர்களின் விமர்சனங்களைத்தான் பார்ப்பேன்; ஆனா இப்போ..." - நானி

நானி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஹிட்: தேர்ட் கேஸ்' (HIT: Third Case) சைலேஷ் கொலனு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். மே 1 ஆம் தேதி இத்திரைப்பட... மேலும் பார்க்க

Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி

டோலிவுட்டின் 'ஹிட்' பிரான்சைஸிலிருந்து மூன்றாவது படமாக 'ஹிட்: தேர்ட் கேஸ்' (HIT: Third Case) படம் உருவாகியிருக்கிறது. நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியிருக்க... மேலும் பார்க்க