ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இ...
சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!
தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1986, கர்நாடக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண் சூட், 2023, மே 25-ஆம் தேதி சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக கர்நாடக காவல் துறை தலைவராக (டிஜிபி) அவர் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜெய்ஸ்-இ-முகமது தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் கொலை!