ரஷியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இ...
நாயகனாக லோகேஷ் கனகராஜ்... இயக்குநர் இவரா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநரானார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் படம் பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து கைதி - 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், லோகேஷ் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறாராம்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் கைவிடப்பட்டதால் அருண் மாதேஸ்வரன் தன் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஆக்சன் பின்னணியில் உருவாகும் இக்கதையில் நடிக்க லோகேஷ் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பொது நிகழ்ச்சிகளில் சமந்தா கண்கலங்க காரணம் என்ன தெரியுமா?