செய்திகள் :

கார்த்திகை தீபம் ஆர்த்திகாவின் புதிய தொடர்! ஜோடி யார் தெரியுமா?

post image

கார்த்திகை தீபம் தொடரில் நாயகியாக நடித்த நடிகை ஆர்த்திகா புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெய்வமகள், சுந்தரி உள்ளிட்டத் தொடரில் நாயகனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் கிருஷ்ணா, ஆர்த்திகாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இத்தொடருக்கு வினோதினி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் தொடரில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த ஆர்த்திகா, சிறிய இடைவேளைக்குப் பிறகு இத்தொடரில் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு பிளாக் & ஒயிட் என்ற இணையத் தொடரில் கார்த்திக் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இந்தத் தொடரின் வினோதினி என்ற பெயரிலேயே நடிப்பதாகவும், வாழ்வில் போராடி வெற்றி பெறும் பெண்ணின் பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எவ்வாறு எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெறுகிறாள் வினோதினி என்ற அடிப்படையில் இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

வினோதினி / கிருஷ்ணா

பொழுதுபோக்குடன் பெண்களை மேம்படுத்தும் வகையிலான கருத்துகளையும் கூறும் வகையில் வினோதினி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும், திரைப்படங்களிலும் தொடர்களிலும் பல்வேறு வேடங்களில் நடித்த கிருஷ்ணா, இத்தொடரில் வினோதினியை ஊக்குவிக்கும் ஆண் பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில் நடிக்கவுள்ள மற்ற நடிகைகள், நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இளம் நடிகையாக இருந்தும் முதிர்ச்சியான பாத்திரங்களைத் தேர்வு செய்து ஆர்த்திகா நடித்து வருவதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க |கணவரின் இன்ப அதிர்ச்சிக்காக காத்திருந்த நடிகை மணிமேகலை!

‘ஆபரேஷன் சிந்தூா்’: ரஜினி ஆதரவு

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை நடிகா்கள் ரஜினிகாந்த், சிவகாா்த்திகேயன், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனா். இதில் ரஜினி ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிரு... மேலும் பார்க்க

நாடு முழுவதும் போர்ப் பயிற்சி ஒத்திகை - புகைப்படங்கள்

திருவனந்தபுரத்தில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள்.கொச்சியில் தற்காப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற ஒத்திகை பயிற்சியின் ஒரு பகுதியினர்.தில்லி... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகை வைஷாலி தணிகா தான் கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதக்களி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி தணிகா. ... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பிஸியாக நடிகராக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிக... மேலும் பார்க்க