காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
Gill : 'டெஸ்ட் மேட்ச் ஆடுற மாதிரி இருந்துச்சு; ஆனால்...' - திரில் வெற்றி குறித்து கில்
"குஜராத் வெற்றி!'
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடேவில் நடந்து முடிந்திருக்கிறது. மழைக்கு நடுவே பல ட்விஸ்ட்களோடு நடந்து முடிந்த இந்தப் போட்டியை குஜராத் அணி DLS முறைப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

திரில் வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருதையும் வென்றுவிட்டு குஜராத் அணியின் கேப்டன் கில் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
'கில் விளக்கம்!'
கில் பேசியதாவது, 'மழைக்குப் பிறகு நாங்கள் பேட்டிங் ஆட வருகையில் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. ஆனாலும் வென்றுவிட்டோம். அதில் மகிழ்ச்சிதான். நாங்கள் பேட்டிங்கைத் தொடங்கும்போதே மழையும் ஆரம்பித்துவிட்டது. சூழல் ஒரு டெஸ்ட் மேட்ச்சைப் போல இருந்தது.

மைதானம் ஈரமாக இருந்ததால் ஷாட்களை ஆடவும் சிரமமாக இருந்தது. அதனால் கொஞ்சம் நின்று ஆடிவிட்டு பவர்ப்ளேக்குப் பிறகே அட்டாக் செய்ய நினைத்தோம். ஒருகட்டத்தில் நாங்கள் DLS முறைப்படி முன்னிலையில்தான் இருந்தோம். திடீரென 20 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தோம்.
ஆனாலும் இந்த பிரபஞ்சம் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுத்ததாக நினைக்கிறேன். அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இந்த மாதிரியான போட்டிகளில் வீரர்களின் ஒவ்வொரு சின்னச்சின்ன பங்களிப்புமே முக்கியம். ரஷீத் கான் காயத்திலிருந்து மீண்டு வந்து வீசிக்கொண்டிருக்கிறார். அது அவ்வளவு எளிதல்ல. வலைப்பயிற்சியில் கடுமையாக முயற்சி செய்து பந்துவீசுகிறார். இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. களத்திற்குள் வரும் உயிரை கொடுத்து ஆடுவதுதான் இங்கே முக்கியம்." என்றார்.