டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!
IPL 2025: "உங்கள் அணி கோப்பை வெல்லாதபோது, நீங்கள் 800 ரன்கள் அடித்தாலும் பயன் இல்லை" - ரோஹித் சர்மா
ஐபிஎல்லில் மும்பை அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா, இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி வருகிறார்.
சமீபத்திய பேட்டியில், பெரிய தொடர்கள் குறித்த அவரது அணுகுமுறை குறித்து பேசியுள்ளார்.
தான் தனிப்பட்ட மைல் கல்களுக்காக விளையாடுவதில்லை என்றும் அணி அந்த போட்டியை, கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதாகவும் கூறியுள்ளார்.

பெரிய ஸ்கோர் அடித்தும் போட்டியை வெல்லவில்லை என்றால் அதனால் எந்த பலனும் இல்லை எனவும், 2019 உலகக் கோப்பை தோல்வியிலிருந்து இந்த பாடத்தைக் கற்றதாகவும் கூறியுள்ளார்.
2019 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 5 சதங்களையும் ஒரு அரைசதமும் விளாசினார். 9 போட்டிகளில் 648 ரன்கள் அடுத்தார். தொடரின் முடிவில் அவரது சராசரி 81.00. ஸ்ட்ரைக் ரேட் 98.33.
பத்திரிகையாளர் விமல் குமார் யூடியூப் சேனலுக்கு அளித்த இந்தப் பேட்டியில் ரோஹித் சர்மா, "நீங்கள் போட்டியை, கோப்பையை வெல்லாவிட்டால் 600,700,800 ரன்கள் அடிப்பதில் எந்த பயனும் இல்லை.

இதை நான் 2019 உலகக் கோப்பையில் கற்றுக்கொண்டேன். எங்கள் அணி இறுதிப்போட்டிக்குச் செல்லாமல் கோப்பையை வெல்லாமல் இருக்கும்போது நான் 500, 600 ரன்களை வைத்து என்ன செய்வேன்?" எனப் பேசியுள்ளார்.
"அதிக ரன்களை மட்டும் அடிப்பது எனக்கு நல்லதாக அமையலாம். ஆனால் அணிக்கு அது நல்லதாக இருக்காது. நான் 20-30 ரன்கள் அடித்தாலே வெற்றி கிடைக்கும் எனக் கூறவில்லை.
ஆனால் நான் அணியின் வெற்றிக்கு எப்படி உதவ வேண்டும் என்பதில் கவனம் கொள்கிறேன்.
ஒவ்வொரு முறை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் தொடரை வெல்லும்போதும் எங்கள் அணியிலிருந்து யாரும் ஆரஞ்சு கோப்பை வென்றது இல்லை. இதற்குப் பின்னால் ஏதோ காரணம் இருக்கிறது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88