உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947' அறிவிப்பு!
`இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு செல்கிறீர்களா?' என்று 1947 இல் வெளியான ஒரு அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் விதித்துள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
தற்போது பலரும் நாட்டை விட்டு பாகிஸ்தானுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில் 1947இல் டெல்லி ரேஷன் துறையால் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு வைரலாகி வருகிறது. அதாவது பாகிஸ்தான் நாட்டவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறும் போது... `நீங்கள் பாகிஸ்தானிற்கு செல்கிறீர்களா? அப்படியானால் தயவு செய்து உங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க மறைந்தாதீர்கள்!' என்று குறிப்பிடப்பட்ட ஒரு அறிவிப்பு வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.