செய்திகள் :

அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி

post image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக தான் ஒருபோதும் கூறவில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டொரி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடியான பேட்டிங் குறித்து பரவலாக பேசப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் முதல் அணியாக 300 ரன்களைக் குவிக்கும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இதையும் படிக்க: மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி

கடந்த ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 200 ரன்களுக்கும் அதிகமாக குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த சீசனில் அதிக முறை 200-ரன்களுக்கும் அதிகமாக குவிக்கவில்லை. அந்த அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் கிளாசன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும், அந்த அணியால் இம்முறை அதிக முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்க முடியவில்லை.

பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுவதென்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரயாக விளையாட வேண்டும் என்பதற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை எனவும், ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவதையே ஆதரிப்பதாகவும் அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை ஆதரிப்பதாக நான் கண்டிப்பாக கூறவில்லை. சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடி ரன்கள் எடுக்கின்றனர். ஆனால், இந்த சீசனில் ஹைதராபாத் ஆடுகளம் எங்களைக் காட்டிலும் எதிரணிக்கே அதிகம் பொருத்தமானதாக இருந்தது.

இதையும் படிக்க: 15 ஆண்டுகள் சாபத்தை உடைத்து சாம்பியனான ஹாரி கேன்! விராட் கோலிக்கும் நடக்குமா?

ஒவ்வொரு போட்டி நிறைவடைந்த பிறகும் நான் ஒருபோதும் எங்களது அணியின் அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை ஆதரிப்பதாக கூறியதே இல்லை. போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறோம் என்றே கூறினேன். ஆடுகளத்தின் தன்மை இந்த முறை நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. அதன் பின், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 9 பந்துகள் மீதம் வைத்து 245 ரன்கள் என்ற இலக்கை துரத்திப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த் மீண்டு வர தோனியிடம் பேச வேண்டும்: சேவாக்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். க... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; முதலிடத்துக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதில் மகிழ்ச்சி என விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தலா 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட... மேலும் பார்க்க

திணறிய தில்லி கேபிடல்ஸ்; காப்பாற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா!

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ம... மேலும் பார்க்க

சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக ஹைதராபாதில் மாற்று வீரர் சேர்ப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சமரன் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற சமரன் ரவிச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, நடப்பு ஐபிஎ... மேலும் பார்க்க