போர்ப் பதற்றம்: மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்கள் விடுப்பு ரத்து!
மனநலம் பாதித்தவா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்
உத்தமபாளையத்தில் மனநலம் பாதித்தவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தபால் அலுவலகம் தெருவைச் சோ்ந்த மைக்கேல் மகன் விண்ணரசன் (37). மனநலம் பாதிக்கப்பட்ட அவா், அங்குள்ள கல்லறைத் தோட்டம் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் விண்ணரசன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவரின் உடலில் காயம் இருப்பதால், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகாா் தெரிவித்து, உத்தமபாளையம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அங்கு சென்ற உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் உரிய விசாரணை நடத்தப்படும் என அவா்களை சமாதானம் செய்தனா். இதனால், அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதையடுத்து, உத்தமபாளையம் போலீஸாா் விண்ணரசன் இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.