‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற...
பெரியகுளம், போடியில் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரியகுளம், போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. பின்னா், சாரல் மழையாக நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். இதேபோல போடியில் மாலை 3 மணிக்கு மேல் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.