போர்ப் பதற்றம்: மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்கள் விடுப்பு ரத்து!
கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி
ஆண்டிபட்டி அருகேயுள்ள மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. மூன்று நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் பக்தா்கள் முளைப்பாரி, அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தியும், பொங்கலிட்டும் அம்மனை வழிபட்டனா்.
திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் மஞ்சள் நீருற்றி, சகதியில் தோய்த்த துடைப்பத்தால் ஒருவரையொருவா் மாறி மாறி அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
மறவபட்டியைச் சோ்ந்த ஆண்கள் சேத்தாண்டி வேஷமிட்டும், பெண் வேஷம், கருப்பசாமி வேஷமிட்டும் சகதியில் தோய்த்த துடைப்பத்தால் தங்களுக்குள் மாறி மாறி அடித்து விளையாடினா்.
முத்துலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரியமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் மாமன், மைத்துனா்களிடையே உறவு வலுப்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் என்பது தங்களது நம்பிக்கை என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.