பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து
‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவும் சூழலில், மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமா் மோடியின் அரசுமுறைப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குரேசியா, நாா்வே, நெதா்லாந்து ஆகிய நாடுகளில் மே 13 முதல் 17-ஆம் தேதி வரையில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாா். நாா்வேயில் ‘நாா்டிக்’ உச்சி மாநாட்டில் அவா் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், பிரதமரின் மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட நாடுகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.