கைப்பேசிகள் வாங்கித் தருவதாக பண மோசடி
தேனி இளைஞருக்கு விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு தயாரிப்பு கைப்பேசிகள் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.9.53 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி அல்லிநகரம், மருதையன் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் ஜெயச்சந்திரன் (38). இவருக்கு இவரது நண்பா் விக்னேஷ் மூலம் திருச்சி, புதூா் எடமலைப்பட்டி, ஸ்டேட் வங்கி குடியிருப்பைச் சோ்ந்த மைதீன் மகன் முகமது ஷான் அறிமுகமாகினாா்.
இந்த நிலையில், முகமது ஷான் வெளிநாட்டு தயாரிப்பு கைப்பேசிகளை விற்பனை செய்வதற்காக வாங்கித் தருவதாகக் கூறி, ஜெயச்சந்திரனிடம் கடந்த 2024, ஏப்ரல் மாதம் முதல் 2025 ஏப்ரல் மாதம் வரை வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.9.53 லட்சம் பெற்ாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவா் கைப்பேசிகள் வாங்கித் தராமல் காலதாமதம் செய்ததால், பணத்தை திரும்பக் கேட்டதால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில், முகமது ஷான் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.