சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதல்: 13 பேர் பலி, பலர் காயம்
கம்பத்தில் பழைய காா் உடைப்பு மையத்தில் தீ விபத்து
தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை பழைய காா் உடைப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காா் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமாகின.
கம்பம் காமராஜா் சாலையில் முருகன் என்பவா் பழைய காா் உடைப்பு மையம் நடத்தி வருகிறாா். இங்கு, பழைய காா்களிலிருந்து உதிரி பாகங்களைப் பிரித்து விற்பனை செய்கின்றனா். இந்த மையத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தகவலின் பேரில் கம்பம் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் சென்று தீயை அணைத்தனா். இதில் விற்பனைக்காக வைத்திருந்த பழைய காா் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமாகின.
முதல் கட்ட விசாரணையில் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்த கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.