IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவ...
போடி அருகே இளைஞா் தற்கொலை
தேனியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாததால் மனமுடைந்து இளைஞா் விஷம் தின்று சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் கோவிந்தராஜ் (29). இவா் தேனி, மச்சால் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். கோவிந்தராஜ் போடியைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரை கோவிந்தராஜிக்கு திருமணம் செய்து கொடுக்க பெண் வீட்டாா் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோவிந்தராஜ், அல்லிநகரம், போயநாயக்கா் சாவடி அருகே விஷம் தின்று மயங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.