தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!
காஷ்மீரிலிருந்து 38 தமிழக மாணவர்கள் தில்லி திரும்பினர்!
புது தில்லி: ஜம்மு-காஷ்மீரிலுள்ள பாராமுல்லா பகுதியில் அமைந்துள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 38 மாணவர்கள் இன்று(மே 11) புது தில்லிக்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக காஷ்மீரிலிருந்து அடுத்த சில நாள்களில் அழைத்து வரப்படவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களும் இங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.