செய்திகள் :

ஐபிஎல் மே 16 அல்லது மே 17-ல் தொடங்க வாய்ப்பு; இறுதிப்போட்டி எங்கு தெரியுமா?

post image

ஐபிஎல் தொடர் மே 16 அல்லது மே 17-ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன.

இதையும் படிக்க: தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்; ரிக்கி பாண்டிங் செய்தது என்ன?

மே 16 அல்லது மே 17-ல் தொடங்க வாய்ப்பு

தற்காலிகமாக ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் மே 16 அல்லது மே 17 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாகவும், இறுதிப்போட்டி கொல்கத்தாவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கான ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: தற்போது வரை ஐபிஎல் தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. பிசிசிஐ அதிகாரிகள் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை எவ்வாறு நடத்தி முடிப்பது என்ற ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிசிசிஐ செயலர், பிசிசிஐ தலைவர் அணி நிர்வாகங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படுவதற்கான அட்டவணை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

எந்த போட்டியிலிருந்து தொடங்கப்படும்?

மே 9 ஆம் தேதி விளையாடவிருந்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியிலிருந்து ஐபிஎல் போட்டிகள் தொடரும் என ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஐபிஎல் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனைத்து அணிகளும் அவர்களது வீரர்களை திரும்ப அழைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற மே 16 அல்லது மே 17 ஆம் தேதியில் லக்னௌவில் தொடங்கும். ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இறுதி அட்டவணை நாளை (மே 12) வெளியிடப்படும்.

இதையும் படிக்க: முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

தில்லி மற்றும் தர்மசாலாவில் அதிக போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பில்லை. நான்கு நகரங்களில் மட்டுமே மீதமுள்ள போட்டிகள் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது. குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறும் இடத்தில் மாற்றம் இருக்காது. ஜூன் 1 ஆம் தேதி மழைக்கான வாய்ப்பிருப்பதால், இறுதிப்போட்டி கொல்கத்தாவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. இறுதிப்போட்டி அகமதாபாதில் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 16 போட்டிகளும் ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, லக்னௌ ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே நடத்தப்பட வாய்ப்பிருப்பதால், தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அவர்களது சொந்த திடலில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.

தர்மசாலாவில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை மீண்டும் நடத்த வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அந்த போட்டிக்கு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. மீதமிருக்கும் 7 அணிகளுக்குள் முதல் 4 இடங்களுக்கான போட்டி நிலவுகிறது.

இதையும் படிக்க: வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை திரும்ப அழைக்கும் ஐபிஎல் அணிகள்..! ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்; ரிக்கி பாண்டிங் செய்தது என்ன?

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பவில்லை.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர... மேலும் பார்க்க

வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் ஐபிஎல் அணிகள்..! ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை ஐபிஎல் அணிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணம... மேலும் பார்க்க

ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால், இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் கார... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - தில்லி போட்டி மீண்டும் தொடங்குமா?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தா... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக... மேலும் பார்க்க