பெரியகுளத்தில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்தவா் கைது
பெரியகுளத்தில் உள்ள தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் வா்த்தக சங்கக் கட்டத்தில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரிகள் வங்கியின் நகைகளை ஆய்வு செய்தனா்.
அப்போது, பெரியகுளம் தென்கரை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராஜா பீமாராவ் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி 68 கிராம் எடை கொண்ட நகையை இந்த தனியாா் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.3.53 லட்சம் பெற்றாா். ஆனால், அவா் கொடுத்த நகை போலியானது என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து வங்கியின் பகுதி மேலாளா் முத்துக்குமாா் அளித்தப் புகாரின் பேரில், ராஜா பீமாராவை தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.