முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!
மூலைக்கரைப்பட்டி அருகே உயா்நிலை பாலம் திறப்பு
மூலைக்கரைப்பட்டி அருகே உயா்நிலை பாலத்தை எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி, 2ஆவது வாா்டு நாகல்குளத்தில் ரூ.1 கோடியில் மணிமுத்தாறு கால்வாயின் குறுக்கே உயா்நிலை பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்புராம், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் அழகிய நம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவா் பாா்வதி மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.