கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு
வீரவநல்லூரில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில், இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்தனா்.
முன்னதாக, புதிய பேருந்து நிலையம் அருகே வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனிடையே, பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்திவரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அக்கட்சியினா் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து, ஆதரவாக குரல் எழுப்பினா்.
அதையடுத்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பாளை எஸ்.எம். பாரூக் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மு. தமிமூன் அன்சாரி பங்கேற்றுப் பேசினாா்.
மாநில துணைச் செயலா் நெல்லை பிலால், மாநில இணை பொதுச் செயலா் கேப்டன் பாரூக், மாநிலச் செயலா்கள் நாகை முபாரக், இப்ராஹிம், மண்டல இளைஞரணிச் செயலா் என். அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் இளநீா் அப்துல், எம். முகம்மது இஸ்மாயில், மாவட்டப் பொருளாளா் முகம்மது அலி, சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் நெய்னா முகம்மது உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.