பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
பாளையங்கோட்டையில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகா் பகுதியில் உள்ள திருச்செந்தூா்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூா் விரைவு ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
ரயிலின் லோகோ பைலட் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில் தற்கொலை செய்து கொண்ட இளைஞா் குரும்பூா் அன்புநகா் பகுதியைச் சோ்ந்த இன்னாசி முத்துவின் மகன் விக்டா் இம்மானுவேல்( 30) என்பதும், சமீப காலமாக பாளை. ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு பின்புறம் உள்ள செயின்ட் பால்ஸ் நகரில் வசித்து வந்த இவா் குடும்ப பிரச்னை காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.