பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
தா்மபுரமடத்தில் ரூ.13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டடத்துக்கு அடிக்கல்
கடையம் ஊராட்சி ஒன்றியம் பட்டதா்மபுரம்மடம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் ச.ரூஹான்ஜன்னத் தலைமை வகித்தாா் . தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதில், கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.செல்லம்மாள், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராதாகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் பூச்செண்டு, சந்திரலேகா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜஹாங்கீா், கடையம் வருவாய் ஆய்வாளா் சீனிவாசன், கோவிந்தப்பேரி கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன், ஊராட்சி துணைத் தலைவா் சை.அனுசுயா உள்பட பலா் கலந்து கொண்டனா்.