“ரன்களையும் தாண்டி...” விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
ஒற்றுமையே இந்தியாவின் வலிமை: ஹாஜா கனி
ஒற்றுமையே இந்தியாவின் வலிமை என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய காலமிது என்றாா் தமுமுக பொதுச்செயலா் பேராசிரியா் ஹாஜாகனி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: ராணுவ வீரா்களுக்கு நன்றி தெரிவித்தும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது.
அதில், மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களும் பங்கேற்று இந்திய ராணுவத்திற்கான ஆதரவை தெரிவித்திருந்தோம். ஒற்றுமையே நாட்டின் வலிமை என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய காலமிது என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும்.
போா் கொடியது. போா் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளது வெறும் அறிவிப்பாக மற்றும் இல்லாமல் இரு நாட்டு மக்களுக்கும் நல்லதாக அமைய வேண்டும்.
நாட்டின் இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நடைபெற இருந்த தென்மண்டல மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பும், நல்வாழ்வும், சமூக நல்லிணக்கமும் மிகவும் முக்கியம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, தமுமுக திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ரசூல் மைதீன், மனிதநேய வழக்குரைஞா்கள் சங்க மாநிலப் பொருளாளா் முகம்மது ஹுசைன், தேயிலை மைதீன், பெஸ்ட் ரசூல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.