செய்திகள் :

Travel Contest : இடிந்த நிலையில் கோவில்கள், ஆனாலும் பிரம்மிப்பு! - கம்போடியா கொடுத்த அனுபவம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கடவுளை வேண்டிக் கொண்டு எங்கு செல்வது என்றாலும் தனியாகவே செல்வது, அதில் ஒரு த்ரில் இருக்கும் அது எனக்கு மிகவும் பிடிக்கும். தனியாக செல்வதற்கு என்று ஒரு சில வழிமுறைகள் வகுத்து வைத்துள்ளேன், அது

*யாரிடமும் வாதம் செய்யக்கூடாது,

*எல்லோரிடமும் பணிவாக நடக்க வேண்டும்,

*தனியாக எங்கும் செல்லக்கூடாது,

எப்போது கூட்டம் உள்ள இடங்களிலேயே பயணிக்க வேண்டும், இப்படி இருந்தால் உடம்பில் உள்ள தக்காளி சட்னி வெளியே வராமல் பார்த்துக் கொள்ளலாம், ‘பயந்தாங்கோலி’ என்று எண்ணி விடாதீர்கள் உள்ளுர்ள இரத்தம் பார்க்காத நாலே இருக்காது! சத்தியமாக, சொந்த ரத்தம் தான் தினமும் சுகர் செக் பண்ணுவேன்.

கம்போடியா

தனியா செல்வதற்கு முடிவு எடுத்தாச்சு, டிக்கெட் எடுத்தாச்சு, விமானத்திற்கு காத்திருக்கிறேன், எவனோ சோதனை செய்யும் இடத்திலேயே பெட்டியை விட்டு, விட்டு சென்று விட்டான். அறிவிப்பு வந்தபடியே இருந்தது, வந்து எடுத்து செல்லுமாறு கதறியபடியே இருந்தார்கள். என் மனதிற்குள் யாரோ தவறான பொருளை எடுத்து வந்து இருக்க வேண்டும், பிறகு பயத்தில் அப்படியே விட்டு விட்டு சென்று இருக்க வேண்டும், என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தேன்.

அறிவிப்பு சற்று விளக்கமாக வந்தது நீலக் கலர் பெட்டி, என் மனதிற்குள் ‘பயபுள்ள நம்ம கலர் பெட்டிய வேற வச்சிருக்கான்’ என்று, விமானத்திற்கு செல்லும் போது தான் தெறிந்தது அது என்னுடைய பெட்டி என்று, நேராக சென்றேன் சோதனை செய்த இடத்திலேயே இருந்தது அந்த அதிகாரி அதட்டியபடியே கேட்டார், “உள்ளே என்ன இருக்கு?”, “மூணு பேன்ட், மூணு சட்டை” என்று சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டு ஓட்டமாய் விமானத்தை நோக்கி ஓடினேன்.

ஒருவழியாக சிங்கப்பூரிலிருந்து சியாம் ரீப் வந்து சேர்ந்தேன், சியாம் ரீப் இதுதான் கம்போடியாவில் அங்கோர்வாட் கோவில் இருக்கும் இடத்திற்கான விமான நிலையம், “சியாம் ரீப்” என்றால் வெற்றிகொண்டான் என்று பொருள், தாய்லாந்து ஒரு சமயம் இந்த இடத்தை பிடித்து வைத்திருந்தபோது தாய்லாந்துடன் போர் செய்து வெற்றி கொண்டதால் இதற்கு இந்தப் பெயர் கம்போடியாவில் கெமர் என்ற இன மக்கள் வாழ்கிறார்கள். மொழியின் பெயரும் கெமர் லெமூரியா கண்டத்தின் மிச்சம் என்றும் சொல்கிறார்கள் லே மூர் பிறகு கெமர் ஆனதாம்.

ஒருவழியாக “சியாம் ரீப்” பின் விமான நிலையத்தை அடைந்தேன், வெளியே வந்து விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்ல பயண அலுவலகத்தில் விசாரித்தேன் USD40 கேட்டார்கள் பணத்தை குருவி சேர்ப்பது போல் சேர்த்து பணம் சம்பாதித்ததால் செலவு செய்ய மனம் வரவில்லை, மனத்திற்குள் கவுண்டமணி கன்னத்தில் ஒரு அறைவிட்டு என்னிடம் கேட்டார் “எந்த குருவி டா காசு சேர்த்தது அதனை பார்த்த?” என்றார் பிறகு வெளியே வந்து 25 அமெரிக்க டாலருக்கு ஒரு சிறிய வேனில் பயணம் ஆனேன் மற்ற இடத்தில் ஓரளவுக்கு ஆங்கிலமும் பேசினார்கள்.

டுக் டுக்

டுக் டுக் ஓட்டுனர் சரியாக அந்த இடத்தில் என்னை கொண்டு சேர்த்தார் டிக்கெட் வாங்கிக்கொண்டு படகில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

மூன்று மாடி உயரத்திற்கு மரத்தில் வீடு கட்டி, மூன்றாவது வீட்டிலேயே குடியிருந்தார்கள் கீழே உள்ள இரண்டு அடுக்கு வீடுகளிலும் யாருமே குடியில்லை அதிலெல்லாம் நீர்நிலைகள் நின்றதற்குண்டான அடையாளங்களுடன் அந்த மரக் கட்டிடங்கள் காட்சியளித்தன.

அவர்கள் வாழ்க்கையை நினைத்து எனக்கு மிகவும் பாவமாக இருந்தது, இங்கு வாழ வழியில்லாமல் தண்ணீரில் வாழ்கிறான் என்று மனதில்பட்டது.

USD27 கட்டி படகு பயணம் புதிய அனுபவமே.

cambodia

இரவு வாழ்க்கை நகரத்தை சுற்ற தெம்பு இல்லை அதனால் சாப்பிட இந்திய உணவுகளை தேடி பயணத்தை, தொடர்ந்தேன் அப்பொழுது நான் கண்டுபிடித்தது “தோசா கார்னர்’ என்ற கடை , இந்த கடை பற்றி அவசியம் சொல்லியே ஆக வேண்டும்.

எண்பதுகளில் வாரப் பத்திரிகையில் இரண்டு சைக்கிள் வீரர்கள் பற்றிய உலகத்தை சுற்றிய சைக்கிள் வீரர்கள் பற்றிய செய்தி வராத பத்திரிகைகளே கிடையாது. நிறைய வாரப் பத்திரிகைகளின் அட்டைகளை நிரப்பியவர்கள் அவர்களே இங்கு கடையும் வைத்திருந்தார்கள்.

அந்த கடையின் பெயர்தான் தோசா கார்னர் கடை முழுவதும் அவர்கள் ஒவ்வொரு நாட்டின் அதிபர் உடன் இணைந்துள்ள புகைப்படம் ஒட்டி இருந்தது, ருசி அமோகமாக இருந்தது நம்ம ஊரு கடைக்கு சிறிதும் குறைவாக தெரியவில்லை.

அப்படி ஒரு ருசி, தேநீர் சாப்பிட்டேன் அதுவும் அவ்வளவு ருசியாக இருந்தது, கம்போடியா வந்தால் ஷ்யாம் ரிப்பு வந்தால் இந்த கடைக்கு அவசியம் வரவேண்டும்.

மறுநாள் விடிகாலை வெளியே சென்று பார்த்த பொழுது சுவிச்சர்லாந்தில் அணியும் உடைகளை அணிந்திருந்தார் என்னிடம் ஜாக்கெட் இல்லையா என்றார் குளிருமா என்று கேட்டேன் ஆமாம் என்றார்.

வண்டி கிளம்பிய அடுத்த நிமிடமே குளிரில் என் தாவாங்கட்டையில் டைப் அடிக்க ஆரம்பித்தது.

5 கோவில்களுக்கும் சேர்த்து ஒரே டிக்கெட் வாங்க வேண்டும் USD35, குளிர் நடுக்கத்தில் டுக் டுக் ஓட்டுநரையும் சேர்த்துக் கொண்டு காப்பிக்கடை நோக்கி ஓடினேன், டிக்கெட் எடுக்கவில்லையா? என்றார்.

முதலில் காப்பி என்று வாங்கி முதலில் நடுக்கத்தில் இருந்து வெளியேறினேன் மனதிற்குள் வடிவேலு பேச ஆரம்பித்தார்.

பிறகு ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு மீண்டும் வண்டியில் ஏறி கோவிலை நோக்கி புறப்பட்டோம்.

கோவில் வாசலுக்கு சென்றதும் பகீரென்றது, ஒரு கிலோ மீட்டருக்கு நடந்து தான் செல்ல வேண்டும்.

கூட்டமாக இருந்ததால் வழிகாட்டிகள் பேசுவது இலவசமாகவே என் காதுகளை எட்டியது, ஒட்டு கேட்டபடியே என் பயணத்தை தொடர்ந்தேன். நுழைவாயிலில் ஒரு ஏரி, அதை கடந்தால் மிகப்பெரிய ஏழு தலை நாகங்களின் சிலை, ஏழு தலையும் ஓங்காரம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், துரியம் என்பவற்றை குறிக்குமாம் பாம்பு கழுத்தில் உயிர் சுழற்சி குறிப்பதற்காக ஒரு சக்கரமும் செதுக்கப்பட்டு இருந்தது.

Angkor Wat, Krong Siem Reap, Cambodia

அந்த அகழியில் ஒரு கல் பாலமும், ஒரு மிதவை பாலமும் போட்டிருந்தார்கள், ஏரியின் முன்பு சூரிய உதயம் காண கூட்டம் புகைப்பட கருவியுடன் முகாமிட்டிருந்தது.

உயரமான கோவிலுக்கு மேலே வருவதற்குள் சூரியன் கண் கூச ஆரம்பித்து விடும் அளவிற்கு வெள்ளையாகி விட்டிருந்தான். 6 வடிவங்கள் அதுவே கோவில் முழுவதும் சிறிதும் பெரிதுமாக தூண்கள், பாம்பு, ஆண், பெண், சில இடங்களில் மகாபாரத காட்சிகள் இப்படியே தான் இந்த கோவில் செதுக்கப்பட்டு உள்ளது. எல்லாம் சிதலமடைந்துவிட்டது,

கோவில் உள் நோக்கி நகர்ந்து கண்ட காட்சி உள்ளே கிடந்த சில கற்களில் ஒரு குச்சி சொறுகும் அளவிற்கு பள்ளம் இருந்தது. அதில் கம்பியை சொறுகி யானையை பயன்படுத்தி இழுத்து வருவதற்காக, பெரும்பாலான சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தது, தியானம் செய்ய ஒரு இடமும் இருந்தது.

அங்கு அன்றைய தினம் திருமணம் முடிந்த தம்பதிகள் ஜோடியாக வந்திருந்தனர்.

கோவிலுக்குள் செல்வோம் எல்லாம் இடிந்த நிலையிலேயே இருந்தது, அதையும் மீறி நம்மை அந்த பிரம்மாண்டம் அதிசயிக்க வைக்கிறது,

விஷ்ணு கோவிலை அடுத்து ‘தா புரோம்’ என்ற அடுத்த கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து அங்கே சென்று இதுவும் பெரிய கோவில், கிழக்கு வாசல், மேற்கு வாசல் என்று ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அந்த கோயில் இருந்தது, பறவையின் எச்சத்திலிருந்து விதை முளைக்க ஆரம்பித்து கட்கோயிலேயே தன் வேர்களால் மட்டுமே பிடித்து வானுயர வளர்ந்து நிற்கிறது மரங்கள்.

ராணி கல்லறை கோவிலில் இருந்த தங்கம், வைரம் எல்லாம் களவாடப்பட்டு விட்டதாம், இன்று எது உன்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது.

மாலை அப்சரா நடனம்

அடுத்த நாள் காலை மலை நோக்கி பயணம், நீண்ட பயணம் நான் காரில் செல்ல டுக்டுக் ஓட்டுநரிடம் சொன்னேன்,

என்றபடி அமர்ந்திருந்தேன் மலையின் ஈரக்காற்றும் அழகும் அத்தனையும் மறந்து மனம் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாடத் தொடங்கியது,

சுமார் 30 நிமிட பயணத்திற்கு பிறகு மலையில் செங்குத்தான பள்ளம் ஒன்று இருந்தது அந்த இடத்தில் பல சுற்றுலா பயணிகள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து நாங்களும் அங்கு இறங்கி நடக்க சென்றோம் சரியான பள்ளம் தான் பார்ப்பதற்கு வயிற்றில் பகீர் என்றிருந்தது. அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் உட்கார்ந்து ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

பிறகு மீண்டும் ஒரு 10:00 நிமிடம் புத்த ஆலயமும், பக்கத்தில் ஒரு சிவலிங்கமும் இருந்தது, மத பேதமின்றி அனைவரும் வேண்டுகோளோடு நீரால் அபிஷேகம் செய்தனர், நானும் அதை செய்தேன். அதனை முடித்த கையோடு ஆயிரத்து எட்டு லிங்கங்கள் இருக்கும் அருவியைப் பார்க்கப் புறப்பட்டோம்,

பிறகு 10 நிமிட தூரம் பயணம் நடந்த உடன் டுக்டுக் ஓட்டுநரும் உடன் வந்தார், அதிக ஆவலுடன் அங்கு சென்றேன் யாரும் நீரோடையில் இறங்க முடியாது சிறிதும் பெரிதுமாக சிவலிங்கங்கள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தன.

இரண்டு நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் சுற்றி விட்டு விமான நிலையம் செல்லும் பேருந்து நிலையத்திற்கு டுக்டுக் என்னை அழைத்து வந்தார், பேருந்துக்கு 45:00 நிமிடம் இருந்தது.

நானும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு டுக்டுக் ஓட்டுநரை நீங்கள் சென்று வாருங்கள், உங்கள் பிழைப்பு பாருங்கள், என்றேன் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சவாரி வந்தது அவரை அழைத்தார்கள், வேண்டாமென்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்.

ஏன்? என்று கேட்டேன், நான் சென்றதும் செல்வதாக கூறினார், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மொத்த பணமும் கொடுத்து விட்டிருந்தேன், ஆனால் அவர் வந்த சவாரியை வேண்டாமென்று சொன்னது என் மனதிற்குள் நெருடலாய் இருந்தது, மீண்டும் 25 அமெரிக்க டாலரை அவரிடம் கொடுத்தேன், ‘வேண்டாம்’ என்றார் அவர் சட்டைப் பையில் திணித்து விட்டேன், என் பேருந்தும் வந்தது கம்போடியாவிடமும், டுக் டுக் ஓட்டுனரிடமும் கனத்த இதயத்துடன் விடைபெற்றேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest : இரவு நேரத்தில் இந்திரலோக உலா! - வியக்கவைக்கும் சீனா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : தனியாக மாட்டிக் கொண்டால் காலி! - அஜர்பைஜான் சேற்று எரிமலைப் பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : எங்களுக்குள் இருந்த குழந்தைத்தனத்தை மீட்டெடுத்த ஊட்டி! - அம்மாக்கள் `டே அவுட்’

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest : இமயம், மலையேற்றம், நன்னீர் நீராடல்! : மெய்சிலிர்க்க வைத்த காஷ்மீர் ஆன்மீக சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel: இந்த சம்மருக்கு இந்தியாவில் இருக்கும் ”மினி ஸ்காட்லாந்து” செல்ல ரெடியா? -இங்கு என்ன ஸ்பெஷல்?

சம்மருக்கு எங்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தியாவிலேயே பல வியப்பூட்டும் இடங்கள் உள்ளன. அந்த வகையில் ”இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்று அழைக்கப்படும் ஒரு இடத்தைப் பற்றி உங்களுக்கு ச... மேலும் பார்க்க

அமிலம் ஊற்றி அழிக்க முயற்சி? - மரங்களின் மெளன குரல்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க