+2 மாணவர்களுக்கு Key Answers புத்தகம் வழங்கிய எம்எல்ஏ - பாராட்டிய ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவில் மாணவிகள் 96.70 சதவிகிதத் தேர்ச்சியும், மாணவர்கள் 93.16 சதவிகித தேர்ச்சியும் பெற்றிருந்தனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் 23 மேல்நிலை பள்ளிகளில் படித்த 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தன் சொந்த செலவில் 'தேர்வை வெல்வோம்' என்ற KEY ANSWERS புத்தகத்தை எம்எல்ஏ அன்னியூர் சிவா வழங்கி இருக்கிறார்.
இந்த KEY ANSWERS புத்தகம் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும், இதனால் நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அன்னியூர் சிவாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக பேசிய சின்னத்தச்சூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், “ எங்கள் பள்ளியில் 98 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். KEY ANSWERS புத்தகம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக எளிமையானதாக இருந்தது இந்தப் புத்தகம். இதன் மூலம் எங்கள் மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்றிருக்கிறார்கள்” என்று எம்எல்ஏ-விற்கு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.