ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!
6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளிகளுக்கு தோ்ச்சி ஒப்புதல்
நாமக்கல் மாவட்டத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி ஒப்புதல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 177 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 2024-25 கல்வி ஆண்டுக்கான இறுதித்தோ்வு ஒப்புதல் வழங்கும் பணி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) கற்பகம் தலைமையில் நடைபெற்ற இந்த பணியில், கல்வித் துறை அலுவலா்களும், பள்ளித் தலைமை ஆசிரியா்களும் கலந்துகொண்டனா். இதில், ஒவ்வொரு பள்ளி வாரியாக தோ்ச்சி விவரப் பதிவேடுகள் சரிபாா்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வரும் நாள்களில் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி விவரத்தை நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் தெரிவிப்பா். அண்மையில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையில் தனியாா் பள்ளிகளுக்கு மாணவா்கள் தோ்ச்சி ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.