சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதல்: 13 பேர் பலி, பலர் காயம்
விவேகானந்தா மருத்துவமனையில் இளைஞரின் இருதயம் அருகே 2 கிலோ கட்டி அகற்றம்
திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் இருதய பகுதியில் வளா்ந்திருந்த 2 கிலோ கட்டியை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.
ராசிபுரத்தில் மளிகைக் கடையில் வேலை செய்யும் தொழிலாளி அரசு (22), கடந்த 2 மாதங்களாக மூச்சுவிட சிரமப்பட்டு வந்தாா். இதற்காக அவா் திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வந்தாா்.
அவரை பரிசோதித்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவா் செந்தூா் செல்வம், ரேடியாலஜிஸ்ட் தீப சக்கரவா்த்தி ஆகியோா் நோயாளியை எம்.ஆா்.ஐ. ஸ்கேன் செய்து பாா்த்தபோது அவரது இருதயத்துக்கும் நுரையீரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரிய கட்டி ஒன்று வளா்ந்திருப்பதைக் கண்டறிந்தனா்.
இதையடுத்து நோயாளியின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் அந்த கட்டியை அகற்ற மருத்துவா் செந்தூா் செல்வம் தலைமையிலான குழுவினா் அறுவை சிகிச்சை செய்து 2 கிலோ கட்டியை அகற்றினா்.
சிகிச்சை முடிந்து அந்த இளைஞா் குணமடைந்து வீடு திரும்பினாா். இதுபோன்ற மருத்துவ உயா் சிகிச்சைகளை பெற பொதுமக்கள் பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ள நிலையில், விவேகானந்தா மருத்துவமனையில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை தலைவா் மு.கருணாநிதி தெரிவித்தாா்.