விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ``முழுமையான ஓய்வு தேவை'' - மருத்துவ...
குழந்தைகள் நல மையத்தில் பட்டமளிப்பு விழா
பரமத்தி வேலூா் வட்டத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில், 2024-25-ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் முன்பருவக் கல்வி பயின்று 5 வயது நிறைவுபெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இரண்டு வயது நிறைவுபெற்று குழந்தைகள் மையங்களுக்கு வரும் குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி வேலூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் நடைபெற்றது. இதேபோல, பரமத்தி, ஜங்கமநாயக்கன்பட்டி மற்றும் நல்லூா் ஆகிய குழந்தைகள் மையங்களிலும் இவ்விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மொத்தம் 90 குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கு பேராசிரியா் ராஜு தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் வசந்தி முன்னிலை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் மைதிலி, தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியா்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா். விழாவில், குழந்தைகள் மைய மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள், பெற்றோா் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.