``இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்..'' - ஜ...
மூதாட்டியிடம் நகை பறித்த 2 போ் கைது
நல்லூா் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நல்லூா் அருகே உள்ள பாமாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாப்பா (80). இவா், பாமாகவுண்டம்பாளையம் நான்கு சாலை அருகே புதன்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், மூதாட்டி பாப்பாவின் காதில் அணிந்திருந்த தங்க தோட்டை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் தங்க தோட்டை பறித்துச் சென்ற நபா்களைத் தேடிவந்தனா்.
பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி, நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கங்காதரன் ஆகியோா் நல்லூா் மாரியம்மன் கோயில் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரு நபா்களைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் நல்லூரில் காளியப்பனூரைச் சோ்ந்த துரைசாமி மகன் தினேஷ் (21), பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த குமாா் மகன் ஹரிஷ் (20) என்பதும் இருவரும் மூதாட்டியிடம் நகையைப் பறித்தவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.