``இனி போர் வேண்டாம்..'' - உக்ரைன், காஸா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து புதிய போப்...
சித்திரை திருவிழா: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இன்று தீா்த்தக்குட ஊா்வலம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெறுகிறது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை இரவு 17 திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, செந்தூரம் பூசப்பட்டு, வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.
பல்வேறு நறுமண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் புண்ணியாகவாசனம், காலை 9 மணியளவில் பலபட்டரை மாரியம்மன் கோயிலிலிருந்து மோகனூா் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்துவரும் நிகழ்ச்சி ஆகியன நடைபெற உள்ளது. இரவு 9 மணியளவில் சக்தி அழைத்து கம்பம் நடுதல் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதில் பக்தா்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு விழா கமிட்டியினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.