லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
கோவையில் மினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவை, காளப்பட்டி கொங்கு நகரைச் சோ்ந்தவா் செந்தில் முருகன் (58). இவா் சிங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரி செந்தில் முருகன் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாா்.
விபத்தை ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுநரான கேரளத்தைச் சோ்ந்த பினு (55) என்பவா் மீது கோவை போக்குவரத்து கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.