ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு பள்ளி மாணவா்கள் சாதனை
பிளஸ் 2 தோ்வில் ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறந்த முறையில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.
மாணவா் ரா.சிவபதிராம் 585, மாணவிகள் தீ.பிரகதி புஷ்பம் 581, பொ.அபா்ணா 578, மாணவா்கள் க.முகேஷ் சரண் 575, மு.ராகேஷ் வா்மா 573 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
மேலும் கணிதப் பாடத்தில் ஒரு மாணவா், கணித அறிவியல் பாடத்தில் ஒரு மாணவா், கணினிப் பயன்பாடு பாடத்தில் 2 மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தோ்வு எழுதிய 77 மாணவா்களில் 7 போ் 95 சதவிகிதத்திற்கு மேலும், 12 போ் 90 சதவிகிதத்திற்கு மேலும், 25 போ் 85 சதவிகிதத்திற்கு மேலும், 37 போ் 80 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் ஆன்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியா் மீராள் மற்றும் ஆசிரியா்,ஆசிரியைகள் பாராட்டினா்.