குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி..!
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறைவான போட்டிகளிலே லியோனல் மெஸ்ஸி முறியடித்தார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
மினசோட்டாவில் அலையன்ஸ் ஃபீல்ட் திடலில் நடைபெற்ற போட்டியில் இன்டர் மியாமி, மினசோட்டா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 48-ஆவது நிமிஷத்தில் அசத்தலான கோல் அடித்தார்.
இந்த கோலின் மூலமாக தனது 860-ஆவது கோலை நிறைவு செய்தார்.
சாதனை நிகழ்த்திய மெஸ்ஸி
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 1- 4 என தோல்வியுற்றது. இருப்பினும் மெஸ்ஸி அடித்த கோல் வரலாற்றுச் சாதனையாக மாறியிருக்கிறது.
கால்பந்து தொடரில் அதிகமான கோல்கள் (934) அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 860ஆவது கோலை கடந்த 2023ஆம் ஆண்டு அல்நசீர் அணிக்காக அக்.1ஆம் தேதி அடித்தார். இந்த கோல் அவரது 38ஆவது வயதில் 1,189ஆவது போட்டியில் அடித்திருந்தார்.
லியோனல் மெஸ்ஸி தனது 860-ஆவது கோலை 37 வயதில் 1,098ஆவது போட்டியிலேயே அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்துள்ளார்.
NEW RECORD!
— Messi FC World (@MessiFCWorld) May 11, 2025
Lionel Messi has just become the fastest and youngest player in the history of football to reach 860 official career goals!
Messi did it in 91 fewer games than Cristiano Ronaldo! THE BEST SCORER IN HISTORY! ✅ pic.twitter.com/8G446IS5wX