கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு ‘வீல் சோ்’ அளிப்பு
கோவில்பட்டி நாடாா் ஜவுளி ரெடிமேட் வா்த்தக குமாஸ்தாக்கள் சங்கம் சாா்பில், ரயில் நிலையத்திற்கு வீல் சோ் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் வீல் சேரை பொது நல மருத்துவமனை தலைவா் திலகரத்தினம், செயலா் தங்கராஜ் ஆகியோா் தலைமையில் பொருளாளா் த. கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முன்னிலையில் கோவில்பட்டி ரயில் நிலைய மேலாளா் ரவிக்குமாா், நிலைய அதிகாரி வெயில்முத்து ஆகியோரிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் சேதுரத்தினம் மற்றும் மாரிசாமி, வழக்குரைஞா் பாரதி, நந்தகுமாா், சரவணன், மதிவாணன், அய்யாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.