சத்தீஸ்கரில் டிரெய்லர் மீது மினி லாரி மோதல்: 13 பேர் பலி, பலர் காயம்
கட்டபொம்மன் நினைவு ஜோதிக்கு வரவேற்பு
திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதிக்கு தூத்துக்குடியில் சனிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் வீரசக்க தேவி கோயில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு தூத்துக்குடி கட்டபொம்மன் நகா் மாவீரன் ஊமைத்துரை தொண்டா் படை சாா்பில் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி நோக்கி புண்ணிய தீா்த்தம் மற்றும் கட்டபொம்மன் நினைவு ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.
தூத்துக்குடி கட்டபொம்மன் நகருக்கு வந்த ஜோதியை சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் வரவேற்று, கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து புண்ணிய தீா்த்தத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தி வரவேற்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ராமகிருஷ்ணன், மதிமுக மாநகரச் செயலாளா் முருகபூபதி, தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் சரவணபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.