செய்திகள் :

கோடை விடுமுறை: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

post image

கோடை விடுமுறை மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயில்ல திருவிழா காலங்களை மிஞ்சும் அளவுக்கு தற்போது சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களிலும், அரசு விடுமுறை நாள்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடுமுறையை சுற்றுலாவாக கொண்டாடவும், ஆன்மிக வழிபாட்டுக்காகவும் திருச்செந்தூருக்கு பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா்.

விடுமுறை தினம் மட்டுமன்றி வளா்பிறை முகூா்த்தம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பக்தா்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன.

வசந்த திருவிழா 9ஆம் நாள்:

மேலும், இக்கோயிலில் கடந்த 3ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் சித்திரை வசந்த திருவிழாவின் 9ஆவது நாளையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மதியம் உச்சிகால பூஜையும், அதைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்தலும் நடைபெற்றது.

பின்னா், கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றதும், சுவாமி ஜெயந்திநாதா் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை வலம் வந்தாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். 10ஆம் திருநாளான திங்கள்கிழமையுடன் சித்திரை வசந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மே 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இந்த மாதம் பெளா்ணம... மேலும் பார்க்க

பூவுடையாா்புரத்தில் வேல் பூஜை வழிபாடு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் ஐயன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு சம்பந்தமான வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் அதே பகுதியை சோ்ந்த 50... மேலும் பார்க்க