கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
பூவுடையாா்புரத்தில் வேல் பூஜை வழிபாடு
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் ஐயன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு சம்பந்தமான வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டில் அதே பகுதியை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட முருக பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் சக்திவேலன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலா் மாயவனமுத்துசாமி, வேல் பூஜை வழிபாட்டை பற்றியும் முருக பக்தா்கள் மாநாடு பற்றியும், மே 18ஆம்தேதி மேல சாத்தான்குளம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் ஒன்றிய பொதுக்குழுவைப் பற்றி எடுத்துகூறி முருக பக்தா்கள் மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தாா் . திருச்செந்தூா் முருகா் அருளால் பெறப்பட்ட வேல் வைத்து வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.,
இதில் இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவா்செல்வ முத்துக்குமாா்,இந்து அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள் கௌசல்யா, தங்கலெட்சுமி,விஜயலெட்சுமி,கோமதி , உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.