பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கி திங்கள்கிழமை அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசித்தனா்.
திங்கள்கிழமை திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.
இதனால் கோயில் வளாகம் மட்டுமன்றி கடற்கரையே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.