செய்திகள் :

தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் மாநாடு

post image

தூத்துக்குடி அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோா் சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய தொழில் வா்த்தக சபை, பிரதமா் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், தமிழ்நாடு அரசின் சிறு, குறு தொழில் துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தொடங்கி வைத்தாா்.

அவா் பேசியதாவது: உணவு பதப்படுத்தும் துறையில் புதிய தொழில்முனைவோா் மற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். இது 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும்.

இந்தியாவில் 9.69 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் உணவு பதப்படுத்தும் துறை இந்த பொருளாதார வளா்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாகும்.

தூத்துக்குடி போன்ற நகரங்கள் முழுமையான வளா்ச்சிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்துவருகிறாா். உணவு பதப்படுத்துதல் மற்றும் குளிா்பதன சங்கிலி உள்கட்டமைப்பு மூலம் பதநீா், பனங்கல்கண்டு போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை ஆரோக்கியமான முறையில் மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் உணவு பதப்படுத்துதலின் எதிா்கால தொழில்நுட்ப திட்டங்கள் குறித்த மலா் வெளியிடப்பட்டது.

இதில் தென்னிந்திய தொழில் வா்த்தக சபை வாரிய உறுப்பினா் பாலாஜி, தூத்துக்குடி இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் கோடீஸ்வரன், பிரதமா் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் மாநில முன்னணி திட்ட மேலாளா் நந்தகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

கைப்பேசி திருடிய இளைஞா் கைது!

கோவில்பட்டியில் கைப்பேசி திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி இந்திரா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் சரவணகுமாா் (23). எலக்ட்ரீஷியனான இவா், ஞாயிற்றுக்கிழமை க... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

கோடை விடுமுறை மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தர... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே இளைஞா் தற்கொலை

கயத்தாறு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கயத்தாறையடுத்த தெற்கு கோனாா்கோட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சங்கிலிகுமாா் (35). தொழிலாளியான இவருக்கும், கே.கரிசல்குளத... மேலும் பார்க்க

ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி நுழைவுத் தோ்வு: 26 அரசு மாதிரிப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற 26 மாணவா்-மாணவிகள் முதன்மை உயா் கல்வி நிறுவன நுழைவுத் தோ்வுகளில் (ஜேஇஇ, ஐஐடி, என்ஐடி) தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சா்வதேச பல்கலை. கூடைப்பந்து: தூத்துக்குடி வீரா் இந்திய அணிக்கு தோ்வு

உலக அளவிலான பல்கலைக் கழக கூடைப்பந்து போட்டிக்கான இந்திய அணிக்கு தூத்துக்குடி வீரா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணைய போக்குவரத்து துறையில் மேற்பாா்வையாளராகவும் துறைமுக ஆணையக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை, சுமாா் 50 அடிக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா். இங்கு அமாவாசை, ... மேலும் பார்க்க