செய்திகள் :

IPL 2025 : 'ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா?' - பிசிசிஐ துணைத்தலைவர் அளித்த விளக்கம் என்ன?

post image

ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப் vs டெல்லி
பஞ்சாப் vs டெல்லி

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கருத்து தெரிவித்திருக்கிறார். 

ஐ.பி.எல் தொடர்ந்து நடக்குமா?

இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மாறுகிறது. தற்போதைய சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

ராஜிவ் சுக்லா
ராஜிவ் சுக்லா

ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவினை எடுக்க உள்ளோம். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்திருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Kohli: "நாட்டைப் பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்" - விராட் கோலி

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்'ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

IPL: `பிசிசிஐ தேசத்துடன் உறுதியாக நிற்கிறது’ - ஐபிஎல் போட்டிகளை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பிசிசிஐ

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ... மேலும் பார்க்க

IPL 2025 : 'மீண்டும் எப்போது தொடங்கும் ஐ.பி.எல்?' - நிலவரம் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் எப்போது நடத்தப்படும் எனும் கேள்... மேலும் பார்க்க

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தமா? - வெளியாகும் தகவல் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்... மேலும் பார்க்க

``போரை தேர்வு செய்தது பாகிஸ்தான்; ஆனால்..'' முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்; பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் vs டெல்லி போட்டி ரத்து!

தர்மசாலாவில் பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி மழை காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக சுமார் 8:30 மணியளவில் போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்று பெட்டிங்கைத் டெஹ்ரவு செய்த பஞ்சாப் அணி, 10 ஓவர்களில் விக்கெட் இழப்... மேலும் பார்க்க