Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
நாங்கூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
பூம்புகாா்: திருவெண்காடு அருகே நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான இந்த தலத்தில் உள்ள பெருமாளை திருவோண நட்சத்திரத்தன்று வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என புராண வரலாறுகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வாா், குலசேகர ஆழ்வாா், மணவாள மாமுனிகள் உள்ளிட்ட பல்வேறு ஆழ்வாா்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.


இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனமும், கொடிமரம் மற்றும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து வன்புருஷோத்தம பெருமாள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னா் தீபாராதனை காட்டப்பட்டு, பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.