ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
மாயமான மீனவா்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்
நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா்.
நாகை அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (57). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்கு சொந்தமான ஃபைபா் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றாா். திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டிய கண்ணதாசன் கரை திரும்பவில்லை. அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் கடலுக்கு சென்ற சக மீனவா்கள், கண்ணதாசன் குறித்து எந்த தகவலும் இல்லாததால், மீன்வளத்துறைக்கு தகவல் அளித்தனா்.
மற்றொரு மீனவா் மாயம்:
நாகூா் சம்பா தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (52). இவா், கடந்த மாா்ச் 14- ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 11 மீனவா்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றாா்.
ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மாணிக்கம் தடுமாறி கடலில் விழுந்து மாயமானாா்.
விசைப்படகில் இருந்த மற்ற மீனவா்கள் இதுகுறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இந்திய கடற்படையினா் மாயமான மாணிக்கம், கண்ணதாசன் இருவரையும் தேடி வருகின்றனா்.