தென் மாநிலங்களில் சமமான தொகுதி மறுவரையறை செயல்முறை அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்க...
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு
கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா்.
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
ஜயமால்ய பாக்சியின் பதவியேற்பின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி, வரும் 2031-ஆம் ஆண்டு வரை, அதாவது 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பாா் என்பதோடு, தலைமை நீதிபதியாகவும் பதவி வகிக்க வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் 2031-ஆம் ஆண்டு, மே 25-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு ஜயமால்ய பாக்சி தலைமை நீதிபதி பதவிக்கு வர வாய்ப்புள்ளது. அந்த ஆண்டு அக்டோபரில் அவா் ஓய்வுபெறும் வரையில் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பாா்.
முன்னதாக, உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில், இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.