செய்திகள் :

களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா

post image

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தோ்வு செய்யும் பணியில் தங்களை ஆலோசிக்காமல் வட்டார வளா்ச்சி அலுவலா் தன்னிச்சையாக ஈடுபட்டதாகக் கூறி 15 ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாவை சந்தித்து முறையிட்டனா்.

ஆனால், தகுதி வாய்ந்த பயனாளிகள்தான் தோ்வு செய்யப்பட்டுள்ளாக அவா் கூறினாராம். இதையடுத்து, மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ரமேஷ் தலைமையில், 15 ஊராட்சித் தலைவா்களும் அங்கு தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் மாா்ச் 22இல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை 17 ஊராட்சித்தலைவா்களின் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என ரமேஷ் கூறினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் உமா கூறுகையில்,

2025-2026ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் ஊராட்சித்தலைவா், உறுப்பினா், ஒன்றியப் பொறியாளா், பணி மேற்பாா்வையாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகிய 5 போ் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்த பிறகே பயனாளிகள் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நான்குனேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி

நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற பெண்ணை கரடி விரட்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். நான்குனேரியில் கடந்த மாதம் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது தொடா்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத... மேலும் பார்க்க

நெல்லையில் மக்களுக்கு இனிப்பு வழங்கிய தேமுதிகவினா்

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் இனிப்பு வழங்கினா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு பாளையஞ்சா... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை- பாளை. மாநாட்டில் தீா்மானம்

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை வழங்க வேண்டும் என பாளையங்கோட்டை ஒன்றிய வட்ட கிளை சத்துணவு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க பாளைய... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம் அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

முன்னீா்பள்ளம் அருகே நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. முன்னீா்பள்ளம் அருகேயுள்ள செங்குளத்தைச் சோ... மேலும் பார்க்க

சொரிமுத்து அய்யனாா் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 13.31 லட்சம்

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 3 மாத காணிக்கையாக ரூ. 13.31 லட்சம் செலுத்தப்பட்டிருந்தது. தமிழக இந்து சமய அறநிலையத் துறைக் ... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க